தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் தனுஷ் நடித்து இருக்கும் ‘ராயன்’ படத்தில் நடித்து இருக்கிறார்.
இது தனுஷின் 50வது படம் ஆகும். இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
மேலும், இந்த படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் சமீபத்தில் தான் தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் துஷாரா விஜயன் தனுஷ் குறித்தும், ராயன் படம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
இதனை அடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் துஷாரா விஜயன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ‘ராயன்’ படம் தொடர்பாக துஷாரா விஜயன் அளித்த பேட்டியில், இது என்னுடைய வாழ்க்கையில் சாதனையாக நினைக்கிறேன். இந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் சொல்லவே முடியவில்லை.
நான் தனுஷ் உடைய மிகப்பெரிய ரசிகை. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதை நான் ‘பாட்ஷா’ படத்தினுடைய இடைவேளை காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
என்னுடைய திரை வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும். தனுசை பொறுத்தவரை அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அது அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்.
நான் இதுவரை பணியாற்றியதிலேயே ரொம்ப வித்தியாசமான இயக்குனர் தனுஷ் தான். அவர் ஆக்சன் என்று மைக்கில் சொன்ன அடுத்த நொடியே கேமராவுக்கு முன்னால் வந்து நின்று நடிப்பார். அது ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
அந்த நொடியில் படத்தின் கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். இது எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும். மேலும், எனக்கு இப்போது 26 வயது. என்னுடைய 35 வயதில் நடிப்பில் இருந்தே விலகி விடுவேன். அதற்கு பின் நான் உலகம் முழுவதும் பயணம் செல்ல விரும்புகிறேன்.
அதற்காக நான் 35 வயதுக்கு மேல் நடிக்க மாட்டேனா என்றால் அப்படி கிடையாது. இந்த உலகத்தில் நான் பயணிக்காத நாடே இல்லை என்பதை சொல்லும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்வதில் அதிக கவனம் செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.