சினேகா-பிரசன்னா விவாகரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்!

2 years ago 720

சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும்விவாகரத்து பெற இருப்பதாக  சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.


2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வதந்தி பரவி வருகிறது.


இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் நடிகை சினேகா தனது சமூக வலைத்தளத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’ஹாப்பி வீக் எண்ட்’ என்று பதிவு செய்துள்ளார். 


இந்த புகைப்படம் சினேகா-பிரசன்னா விவாகரத்து குறித்த செய்தி அனைத்தும் வதந்தி என்பதை உறுதி செய்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...