சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி... என்ன நாடகம்ன்னு தெரியுமா?

3 years ago 520

சமுத்திரகனியைப் பொறுத்தவரை எப்போதும் சமூக அக்கறையுள்ள படங்களில் தான் நடித்துவருகிறார். அவர் உன்னை சரணடைந்தேன் என்னும் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவர் இயக்கிய சுப்பிரம்ணியபுரம் திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. பருத்திவீரன் படத்திலும் கஞ்சா கருப்போடு சேர்ந்து ஒரு காட்சியில் சமுத்திரக்கனி வருவார். முதலில் சமுத்திரகனி கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தார். 

ஆரம்பத்தில் உதவி இயக்குனர் ஆவதை விட நடிப்பதில் தான் சமுத்திரகனிக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பாலசந்தர் தான், பார்த்தாலே பரவசம் படத்தில் விவேக்கோடு ஒரு காட்சியில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்தார். இன்று சமூக அக்கறையுள்ள அதிலும் கருத்துச் சொல்லும் பாத்திரம் என்றாலே சமுத்திரகனி கால்ஷீட்டைத்தான் முதலில் வாங்குகின்றனர்.


ஹீரோ, வில்லன், குணச்சித்திரப் பாத்திரம் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் அப்லாஷ் அள்ளுகிறார் சமுத்திரகனி. நடிகர் சமுத்திரகனியின் மனைவி பெயர் ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இருகுழந்தைகள் உள்ளனர். 

சமுத்திரக்கனியை நமக்கெல்லாம் நடிகர், இயக்குனர் என்று மட்டும் தான் தெரியும். ஆனால் அவர் சீரியல்களிலும் கூட நடித்திருக்கிறார். 

சினிமாவுக்கெல்லாம் வருவதற்கு முன்பே சமுத்திரக்கனி ரமணி vs ரமணி என்னும் சீரியலில் நடித்துள்ளார். இதில் இவர் சீரியல் நடிகை, காஞ்சனா புகழ் தேவதர்ஷினியோடு நடித்துள்ளார்.

என்னது சமுத்திரக்கனி இந்த சீரியலில் நடித்திருக்கிறாரா? என இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...