சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்த நடிகையா இது? இப்போ என்ன வேலை செய்யுறாங்கன்னு தெரியுமா?

3 years ago 393

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. 

அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் பிரபல தொலைக்காட்சிகளில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றன. 

அப்படி, சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை சந்தோஷி. ரஜினியின் பாபா படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வீராப்பு, மிலிட்டரி படங்களிலும் நடித்தார். தொடர்ந்து பெரிய திரையில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரைப் பக்கம் வந்தவர் அரசி, இளவரசி சீரியலிலும் நடித்தார்.


இவர் லைம்லைட்டில் இருந்தபோதே ஸ்ரீகர் என்னும் நாடக நடிகரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டவர் இப்போது தன் கணவரோடு சேர்ந்து பிளஸ் என்னும் பொட்டிக் ஷாப் நடத்திவருகிறார். 

இதில் மணமகள் ஆடைகள் தயாரிக்கும் பிரத்யேகக் கலைஞர்களும் இருக்கிறார்கள். இப்போது அம்மணி கூடவே அழகுக்கலை வகுப்புகளும் எடுத்துவருகிறார். அண்மையில் இவர் நடத்திய கருத்தரங்கில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லெட்சுமி அழகுச்சிலையாகச் ஜொலித்தார். 

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவை இரண்டும் பெண் குழந்தைகள். இப்போது அன்பான கணவர், மூன்று பிள்ளைகள், தன் பெட்டிக் ஷாப் என வாழ்ந்து வருகிறார் சந்தோஷி.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...