“சிம்டாங்கரன் ” பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்!

2 years ago 428

தமிழ் சினிமா பின்னணி பாடகர் பம்பா பாக்யா(49) இன்று (செப்டம்பர் 2) அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பம்பா பாக்யா தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பின்னணி பாடகர்களில் ஒருவராக அறியப்பட்டவர். விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சிம்டாங்கரன் பாடலை பாடினார். 

ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற, புள்ளினங்கால் என்ற பாடலை இவர் பாடியதன் மூலம் உலகம் முழுக்க தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. யார் இந்த பாம்பா பாக்யா என பலரும் இணையத்தில் தேட ஆரம்பித்தனர். பிகில் திரைப்படத்தில் காலமே என்ற பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலின் ஆரம்ப வரிகளை இவர் பாடினார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பம்பா பாக்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இன்று (செப்டம்பர் 2) அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...