சிம்பு பட நாயகிக்கு கோவில் கட்டி தீபாரதனை

3 years ago 324

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருந்தார். மேலும் அதே நாளில் வெளியான ஜெயம் ரவியின் ’பூமி’ படத்திலும் நிதி அகர்வால் தான் நாயகி. 

தமிழ் திரையுலகில் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமான நடிகை நீதி அகர்வாலுக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிதி அகர்வால் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டி தீபாராதனை காண்பித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குஷ்புவுக்கு அடுத்து நிதி அகர்வாலுக்கு தான் கோவில் கட்டி உள்ளோம் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறிக் கொண்டே தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நடிகை நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டிய புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...