சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை யாரு தெரியுமா?

3 years ago 349

நடிகர் சிம்பு, கவுதம் மேனன் இணைந்தாலே வெற்றி தான் என்று கூறும் அளவிற்கு இவர்களின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 2010 ஆம் ஆண்டு வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரெட் லிஸ்டில் உள்ளது. 

அடுத்து இவர்கள் கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் வெளியானது.அதில் தள்ளி போகாதே என்ற பாடல் இளைஞர்களை கட்டிப்போட்டு விட்டது என்று தான் கூற வேண்டும்.


தற்போது உடல் எடையை குறைந்து ஃபிட்டாக இருக்கும் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.அதையடுத்து பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படமான ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.n ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...