சிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்.. எந்த படத்தில் தெரியுமா?

3 years ago 292

கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியானது. 

கன்னடத்தில் இயக்கிய நரதனே தமிழிலும் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் தமிழ் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் நரதன் இயக்க ஒப்பந்தமான அந்தப் படம் கைவிடப்பட்டு சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் முஃப்தி ரீமேக் உருவாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தற்போது இத்திரைப்படத்தின் வில்லன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார். 

‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் பொலிஸ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்த கவுதம் மேனன் சிம்புவுடன் திரையில் மோதுவதைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...