சில்க்கை நைசா கிள்ளிவிட்டேன்… நேத்து ராத்திரி யம்மா பாடலின் சுவாரசியம் !

3 years ago 463

கமல்ஹாசன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் இடம் பெற்ற நேத்து ராத்திரி யம்மா பாடல் உருவான விதம் குறித்து பார்க்கலாம்.

1982 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

‘சகலகலா வல்லவன்'திரைப்படம் ஆக்‌ஷன் படமா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லலாம்.பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படமா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்தும் கலந்த ஒரு கலவைத்தான் சகலகலா வல்லவன். கிட்டத்தட்ட இப்படம் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது

தங்கையைக் கெடுத்தவனுக்கே தங்கையைத் திருமணம் செய்து வைக்கப் போராடும் அண்ணனின் கதைதான் சகலகலா வல்லவன். ஒற்றை வரிக்கதையை கையில் எடுத்து காட்சிக்கு காட்சி ரசிக்கும்படி திரைப்படத்தில் சுவாரசியத்தை ஓட்டிய பெருமை இயக்குனரையே சேரும்.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில், கட்டவண்டி கட்டவண்டி, இளமை இதோ இதோ, நிலா காயுது, நேத்தி ராத்திரி யம்மா என அனைத்துப்பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

மிட் நைட் மசாலாப்பாடலான நேத்து ராத்திரி யம்மா பாடலை எஸ்.பிபாலசுப்பிரமணியும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடி இருப்பார்கள். இன்று வரை இந்த பாடல், இளசுகள் கொண்டாடும் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இந்த பாடலின் ஹைலைட்டே சில்க்கின் எக்ஸ்பிரஷனும்... எஸ்.ஜானகியின் குரலும் தான்.

இந்த பாடலில் சில்க் நேத்து ராத்திரி யம்மானு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்திருப்பார், இந்த எக்ஸ்பிரஷன் தான்இப்பாட்டின்பிளஸ். இந்த எக்ஸ்பிரஷனை சில்க்கிடமிருந்து வரவைக்க நடன இயக்குனர் புலியூர் சரோஜா மிகவும் கஷ்டப்பட்டாராம். 

நடனத்தில் தூள் கிளப்பிய சில்க்கிற்கு எக்ஸ்பிரஷன்ஸ் மட்டும் வரவே இல்லையாம், டேக் மேல் டேக் வாங்கினாராம் சில்க். இதைபார்த்த புலியூர் சரோஜா, அப்பாடல் காட்சி படப்பிடிப்பின் போது நைசா சில்க்கை கிள்ளிவிட்டுட்டு வலியில் சில்க் அம்மானு சொல்ல... அப்படி வந்தது தானாம் அந்த நைஸ் எக்ஸ்பிரஷன்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...