சிவகார்த்திகேயன் செய்த வேலையைப் பற்றி எனக்குத் தான் தெரியும்.. செய்திவாசிப்பாளர் பனிமலர் ஓபன் டாக்

3 years ago 702

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணத்தைத் தொடங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். 

இவர் சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாக உள்ள RRR படம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே தொகுப்பாளர்கள் ட்ரம்ஸ் வாசித்து கலைஞரை அழைத்து நின்றதை சுட்டிக்காட்டி அவர்களை அறிமுகப்படுத்துமாறு கூறினார். 

சிவகார்த்திகேயன் சைகையால் இவ்வாறு கூறியதை புரிந்து கொண்ட தொகுப்பாளர் அதன் பின்னர் டிரம்ஸ் கலைஞரை அறிமுகம் செய்தார். சிவாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் செய்திவாசிப்பாளர் பனிமலர் சிவகார்த்திகேயன் செய்த வேலை பற்றி எங்களுக்கு தான் தெரியும். செய்தி வாசிப்பாளராக நான் பணியாற்றி தொடங்கியபோது நேரலையில் செய்த சிறு தவறுகளால் என்னுடைய மேனேஜர் என் காதுபடவே இதெல்லாம் வந்து உயிரை எடுக்குது என பேசினார். 

அதன் பிறகு அவர் நான் செய்தி வாசிக்கும்போது வந்து அமர்ந்தாலே எனக்கு பதற்றமாக தான் இருக்கும்.

ஆனால் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து வந்தவர். அவர் மிகவும் பணிவோடு தொகுப்பாளருக்கு அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி அதை திருத்திக் கொள்ளவும் வழி செய்தார். இதுபோன்ற கனிவு எல்லோரிடமும் இருக்காது என பாராட்டியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...