சிவாஜியின் கொள்ளுப்பேரன் யார் தெரியுமா? அந்த நடிகையின் மகனா இது!

3 years ago 410

தமிழ் சினிமாவில் பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜா. அதன்பிறகு அடாவடி, மதுரை வீரன், வாத்தியார் போன்ற 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவரின் சில செயல்கள் ஓவியாவை போல இருந்ததாகவும் போட்டியாளர்கள் புகார் தெரிவித்தனர். 


ஆனால், ஒரு டாஸ்கில் வெற்றி பெற வேண்டும் என போராடியதில் அனைவரின் பாராட்டையும் பெற்றார். பிக் பாஸ் மூலம் ஓரளவிற்கு புகழ் கிடைக்கவே அதற்கு அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான சத்ரு படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. 

பிக்பாஸிற்கு பிறகு இவர் நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் இரண்டாவது மகனான சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து வருகின்றார். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் இருந்தது. 

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனான சிவக்குமார் சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் சுஜா தனது குழந்தை மற்றும் கணவருடன் பீச்சில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரின் குழந்தை நன்கு வளர்ந்து விட்டது. சுஜாவும் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் போல ஜொலிக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...