சிவானியும் என்னையும் நிம்மதியாக வாழ விடுங்கள்... புலம்பி தள்ளும் நடிகர்..!

3 years ago 305

தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான  நடிகை ஷிவானி பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு கடைசி 5 போட்டியாளர்களில் கடைசி இடத்தினை பிடித்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சீரியல் நடிகர் ஆசீமுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது. அசீம் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் ஷிவானி அவருடன் நெருக்கமாக பழகினார்.

தற்போது ஆசீம் அவரது மனைவியை விவாகரத்து செய்ததாக அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தார். இதற்கு காரணம் ஷிவானியால் அடிக்கடி அவரது மனைவியிடம் சண்டை போட்டதாகவும் அதனால் தான் பிரிந்தனர் என்றும் கூறப்பட்டது.

ஆசீம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். எனக்கும் என் மனைவிக்கும் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் விவாகரத்து நடை பெற்றது எனவும், சிவானிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிவானி மற்றும் என்னையும் நிம்மதியாக வாழ விடுங்கள் எனவும் சமூகவலைதளத்தில் வாயிலாக ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் அசீம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...