சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் எளிதில் அதிக மவுசு உருவாகிவிடுகிறது. இவர்களும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது இளசுகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இந்நிலையில் விஜய் டிவியில் நடிக்க வரும் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.
பொண்ணுக்கு தங்க மனசு என்று சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தங்க மனசுகாரி என்ற பெயர் எடுத்த விந்துஜா விக்ரமன் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 8000 வாங்கியுள்ளார்.
ஈரமான ரோஜாவே நாடகத்தில் ஹீரோயினாக நடித்துவரும் பவித்ரா எபிசோட் ஒன்றுக்கு ரூபாய் 13,000 வாங்கினாராம். தொகுப்பாளராக விஜய் டிவிக்கு அறிமுகமாகி தற்போது தேன்மொழி பிஏ என்ற சீரியலில் மூலம் கதாநாயகியாக நடித்து வரும் ஜாக்குலின் எபிசோட் ஒன்றுக்கு 11,000 சம்பளமாக பெறுகிறாராம்.
சிவா மனசுல சக்தி சீரியலில் கதாநாயகியாக நடித்த தனுஜா கௌடா எபிசோட் ஒன்று இருக்கு ரூபாய் 17000 ஊதியமாக பெற்றாராம். அதன் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் நடித்து வந்த ராஷ்மி எபிசோட் ஒன்றுக்கு ரூபாய் 8000 சம்பளம் பெற்றாராம். அதே நாடகத்தில் நடிகை ரக்ஷா ஹோல்லா எபிசோட் ஒன்றிற்கு ரூபாய் 9,000 ஊதியமாக பெற்றாராம்.
இவரைத் தொடர்ந்து அதே சீரியலில் காயத்திரி எபிசோட் ஒன்றிற்கு ரூபாய் 10,000 ஊதியமாக பெற்றாராம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் சுஜித்ரா ரூபாய் 15,000 ஊதியமாக பெற்றாராம். ராஜா ராணி சீரியலில் நடித்துவரும் ஆலியா மானசா எபிசோடு 17,000 ஊதியமாக பெற்று வருகிறாராம்.
சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்த ரட்சிதா மஹாலக்ஷ்மி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் எபிசோடு ஒன்றுக்கு ரூபாய் 17,500 ஊதியமாக பெறுகிறாராம்.