சீரியல் நடிகையானாலும்.... பட்டைய கிளப்பும் பவித்ராவின் Latest Photos!

3 years ago 312

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். 

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். 


அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.


தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவு போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 

இதனை பார்த்த ரசிகர்கள், “சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமாவில் கிளாமர் இருக்கு..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...