சீரியல்களுக்கு ஏற்பட்ட நிலை … நிறுத்தப்படும் விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

2 years ago 401

விஜய் டிவிக்கு இப்போது ஏகப்பட்ட தாய்மார்களின் சப்போர்ட் எக்கச்சக்கமாக உள்ளது. முன்பெல்லாம் சன் டிவியை மட்டும் நம்பி சீரியல் பார்த்து வந்த இல்லத்தரசிகள் தற்போது மக்கள் டிவி, ஜீ டிவி, கலர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்களை பார்க்க துவங்கியுள்ளனர்.

இதனால்,  தரமான சீரியல்களை வழங்க வேண்டும் என்ற கருத்தோடு ஒவ்வொரு தொலைக்காட்சியும் தனது தொடர்களை ஒளிபரப்பு வருவதில் கவனத்தை செலுத்தி வருகிறது.

இதுவரை ஒளிபரப்பாகி வந்த விஜய் டிவியின் தொடர்களான நம்ம வீட்டுப் பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற தொடர்கள் அதிக அளவு ரீச் அடையாத காரணத்தினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொலைக்காட்சிகளுக்கு கை கொடுக்காத காரணத்தினாலும் அந்தத் தொடர்களை நிறுத்துவது என்று தற்போது முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த தகவல் தற்போது தான் வெளிவந்து இருக்கிறது. இதனை அடுத்து இந்த சீரியல்களை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

மேலும் குறிப்பிட்ட அளவு கால அவகாசம் கொடுத்தும் இவர்களால் ரீச் செய்ய முடியவில்லை என்றால் அந்த தொடர்களை நிறுத்தி விடலாம் என்று விஜய் டிவி தற்போது யோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

எனவே நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற சீரியல் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற நிலையில் தான் தற்போது உள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...