சுனைனா திருமணம் செய்யும் நபருக்கு விவாகரத்து – முன்னாள் மனைவி பரபரப்பு பேட்டி
கடந்த சில வாரங்களாகவே பிரபலமான நடிகை சுனைனா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் ` இன்ஸ்டாவில், சுனைனா ஒருவருடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து பலருமே உங்களுக்கு திருமணமா? உங்களுடைய காதலன் யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
பின் இது தொடர்பாக சுனைனா போட்ட பதிவில், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. நாங்கள் மோதிரம் மாத்திக் கொண்டோம். கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதை விரைவில் தெரிவிப்போம். எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்குமே நன்றி. என்னுடைய நிச்சயதார்த்தம் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் முடிவடைந்தது என்று கூறியிருந்தார்.
ஆனால், இவர் திருமணம் செய்யும் நபர் குறித்து குறிப்பிட்டவில்லை. இதை அடுத்து சுனைனா திருமணம் செய்யும் நபர் யார் என்று இணையத்தில் தேடி இருந்தார்கள்.
அப்போது பிரபல யூடியூபரை தான் சுனைனா திருமணம் செய்ய இருக்கிறார் என்று தெரிய வந்து இருக்கிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் நடந்தது. இவர் சலமா முஹம்மது என்பவரை தான் திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனது.
அதன் பின் சமீபத்தில் தான் சுனைனா- காலித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பாக இருவருமே சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.