சூப்பர் சிங்கர் ஆதித்யகிருஷ்ணன் இந்த பிரபல நடிகையின் மகனா?

3 years ago 463

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. 

கடந்த 2006ம் ஆண்டு முதல் சீசனுடன் துவங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 7-வசது சீசனை கடந்து 8-வது சீசனில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8-வது சீசன் துவங்கியது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட போட்டியாளர் தான் ஆதித்யா கிருஷ்ணன். 

பாடல் பாடுவதுடன், கிதார் உள்ளிட்ட இசைக் கருவிகளை அவரால் வாசிக்க முடியும். மேலும், நிகழ்ச்சியின் முதல் எபிசோட்டில், அவரே சொந்தமாக தயாரித்த பாடலை பாடி நடுவர்களை அசத்திவிட்டார்.

இவ்வாறு முதல் எபிசோட்டிலேயே கவனம் ஈர்த்துள்ள்ச் ஆதித்யா கிருஷ்ணன் குறித்து கூகுளில் பலரும் தேடுதலை தொடங்கினார். 

இவருடைய பிண்ணனி மற்றும் தாயார் யார் என்பது குறித்த விபரங்கள் தெரியவந்தன. இது நெட்டிசன்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் வாழ்க்கையை துவங்கி பெரிய திரைக்கு போனவர் மீரா கிருஷ்ணன். செய்தி வாசிப்பாளர், மேடைப் பாடகர், திரைப்பட நடிகை, தொழிலதிபர் மற்றும் வீணை இசைக்கலைஞர் என பன்முகத்தன்மை இவருக்கு உண்டு. தமிழ் உட்பட பல்வேறு மொழிப் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

விஜய், அஜித், தனுஷ் போன்ற ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், குணச்சித்திர காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து சிறப்பு கவனத்தை பெற்றுள்ளார். குறிப்பாக தனுஷ் படங்களில் சரண்யா பொன்வண்ணன் அல்லது மீரா கிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவர் தான் அம்மாவாக நடித்திருப்பார்கள்.

தற்போது மீரா கிருஷ்ணனின் மகன் தான் ஆதித்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாயார் மீராவுடன் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு எண்ணற்ற லைக்குகள் தற்போது குவிந்து வருகின்றன. 

மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...