சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அப்பாவா இது? யாரும் பார்த்திராத அறிய புகைப்படம் இதோ...

3 years ago 461

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினியின் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அது இப்போதும் ரஜினிக்கு பொருந்தும். இன்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவே உள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி ஒரு பிரமாண்டமான வர்த்தகப் பொருள். 70 வயதிலும் அவருக்கான வேல்யூ அப்படியே இருப்பதுதான் அவரின் பலம்.கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். 

கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நுட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை.


சாதாரண கண்டக்டராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சத்தில் இருக்க அவரது திறமையே காரணம். ஸ்டைலான நடிப்பால் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் ரஜினி. 

நடிகர் ரஜினிகாந்தின் அப்பாவை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. இவரது அப்பாவின் பெயர் ரானோஜிராவ். இவர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்.

தமிழ்த்திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர். ரஜினி தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...