சூர்யா உடன் இணைகிறாரா அந்த நடிகை!? ஆர்வத்துடன் ரசிகர்கள்

3 years ago 382

மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். 

குறிப்பாக கர்ணன் படத்தில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கட்டிப்போட்டுள்ளார் நாயகி ரஜிஷா விஜயன்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளதாக சொல்லபட்ட நிலையில் படக்குழு தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சூர்யா கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையாக வைத்து இந்த படம் தயாராகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாக தகவல் கிட்ட தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாகவா என உறுதியாக தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் இந்த தகவலின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...