சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்

3 years ago 292

சூர்யா தயாரிப்பில், இரண்டாவது முறையாக கார்த்தி நடிக்க உள்ள படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சூர்யா தயாரிப்பில் 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். 

விவசாயத்தையும், குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டும் இன்றி,  ஜனரஞ்சகமான படம் பாராட்டை பெற்று வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.


இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், படத்தின் தலைப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார்.

ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான 'கொம்பன்' படத்தை போலவே, இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட உள்ளது 

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரிகிறது. விரைவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவரும், 'பொன்னியின் செல்வன்', 'சுல்தான்', மற்றும் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களை முடித்த பின்னர் முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...