சூர்யாவுக்கு கொரானா தொற்று வரக்காரணம் இதுதானா?

3 years ago 386

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் சாதனை படைத்து பெரிய வெற்றியையும் நல்ல விமர்சனத்தையும் கொடுத்தது.

கொரானா லாக்டவுனுக்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத சூர்யா, சமீபத்தில் தன்னுடைய உயிருக்குயிரான ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரடியாக சென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்போது தன்னுடைய ரசிகர்களுடன் கைகுலுக்குவது, போட்டோ எடுப்பதும் என வழக்கம் போல் இருந்தார் சூர்யா.

ஆனால் அதன் பிறகுதான் எதிர்பாராத விதமாக சூர்யாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் தன்னுடைய ரசிகர்கள் யாருக்காவது கொரானா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என பயந்து கொண்டிருக்கிறாராம் சூர்யா.

இதனால் தன்னுடைய ரசிகரின் திருமணத்திற்கு வந்த அனைத்து ரசிகர்களையும் கொரானா பரிசோதனை செய்யும்படி சூர்யா தன்னுடைய வட்டாரங்களிலிருந்து அவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...