செந்தூரப்பூவே சீரியலில் இருந்து வெளியேறினார் தர்ஷா குப்தா இதுதான் காரணமா?

3 years ago 481

சின்னத்திரை ரசிகர்களுக்கு தர்ஷா குப்தா நன்கு அறிமுகமானவர். சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே, இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம்.

சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக லட்சக்கணக்கான ஃபாலோயர்களோடு சமூக வலைத்தளங்களை கலக்கி வரும் தர்ஷா குப்தாவுக்கு கிடைத்த சின்னத்திரை சீரியல் வாய்ப்பு இவரின் கேரியரை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.

விஜய் டிவியின், மிகப்பெரிய வெற்றி பெற்ற, சமையல் நிகழ்ச்சியான, குக்கு வித் கோமாளி இரண்டாம் சீசன் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா பல சேனல்களில், பல சீரியல்களில் நடித்து வருகிறார். 

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப் பூவே சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அந்த சீரியலில் இருந்து வெளியேறினார் என்று தகவல் வெளிவந்துள்ளது. குடும்பப்பாங்கான தோற்றத்திலும், வில்லி பாத்திரத்திலும் நடித்து வரும் தர்ஷா, இப்படி திடீரென்று சீரியலில் இருந்து விலகியது அதிர்ச்சியாக உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு நாள் பதிவு போடவில்லை என்றாலுமே, ரசிகர்கள் பரபரப்பாகி விடுவார்கள். அந்த அளவுக்கு ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, சீரியலில் இருந்து விலகியதைப் பற்றி எந்த செய்தியும் தெரிவிக்கவில்லை. தர்ஷா குப்தா எதையுமே கூறவில்லையே என்று அவரின் ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி, அழகான, இனிமையான தர்ஷா குப்தாவை, செந்தூரப்பூவே சீரியலில் இப்படி அனலடிக்கும் ஐஸ்வர்யாவாக மாற்றி இருக்கிறீர்களே என்று செல்லமாக புலம்பும் அளவுக்கு, வில்லி பாத்திரத்தில் தர்ஷா குப்தா சிறப்பாக நடித்து வந்தார். 

சீரியலின் முதன்மையான வில்லியாக, ரஞ்சித்தின் மாமா மகளாக நெகட்டிவ் பாத்திரத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தர்ஷா. இவர் விலகியதில், அந்த இடத்தை யார் நிரப்ப முடியும் என்றும் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்டுகளை பதிவு செய்கின்றனர்.

தர்ஷா குப்தா இந்த சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் என்னவென்று அதிகார பூர்வமாக இது வரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், செந்தூரப்பூவே சீரியலில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா பாத்திரத்தில், மற்றொரு நடிகை நடிப்பதாக, இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியானது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...