செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி பழைய ஆதியை பார்க்கலாம்!

3 years ago 504

ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியல் பெரிய ஹிட்டடித்த தொடர். நாயகன்-நாயகி திருமணம் வைத்தே பல எபிசோடுகளை ஓட்டிவிட்டார் இயக்குனர். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஜோடி இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அகிலவாக நடிக்கும் ப்ரியாராமனும் புகழ்ச்சியின் உச்சகட்டத்துக்கே சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இதில் பிரபல பிசினஸ் பெண்மணியாக பிரியா ராமன்,அவரின் மூத்த மகனாக கார்த்திக், இளைய மகனாக கதிர், இதில் கார்த்திக்கு ஜோடியாக ஷபானாவும் நடித்தனர். 

அடுத்து இவர்களுக்கு இடையே நடந்த திருமணமும், அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளும் என்று சீரியல் ஹிட்டடித்தது. சில மாதங்களுக்கு முன் ஜீ தமிழ் சேனல் வரலாற்றிலேயே டி.ஆர்.பி-யில் நம்பர் 1 இடத்தில் வந்து மொத்த சின்னத்திரை ஏரியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது செம்பருத்தி.

இடையில் என்ன பிரச்சனை தெரியவில்லை ஆதியாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்த வெளியேறினார். செம்பருத்தி சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஆதியாக நடித்து வந்த கார்த்திக் தான்.

‘சில தவிர்க்க இயலாத காரணத்தால் கார்த்திக் இனி நடிக்க மாட்டார் ‘ என்று ஜீ தமிழ் அறிக்கை வெளியிட்டது. அவர் வெளியேறிய பிறகு அதில் இருந்து சீரியல் கொஞ்சம் டல் அடிக்கத் தொடங்கியது என்றே கூறலாம். இதனால் சீரியலில் அடுத்த ஆதி யார்? என்ற எதிர்பார்ப்பு மேலூங்கிய போது விஜே அக்னி நட்சத்திரம் அறிமுகம் ஆனார்.

சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு அக்னி பற்றிய அறிமுகமே தேவையில்லை. பிரபல யூடியூப் சேனலில் மூத்த ஆங்கராகவும், விஜேவாகவும் கலக்கி கொண்டிருந்தார் அக்னி. இவருக்கு ஏகப்பட்ட கேர்ள்ஸ் ஃபேன்ஸ் உண்டு. அதிலும் குறிப்பாக பிரபலங்களை பிரத்யேகமாக பேட்டி காண்பதில் அக்னி கைத்தேர்ந்தவர். விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் இவரின் பேச்சு திறமையை பாராட்டியுள்ளனர்.

ஆரம்பத்தில் தயங்கியவர் பின்பு சம்மதம் தெரிவித்து நடிக்கவும் தொடங்கினார். ஆனால் இதுவரை ஆதியாக கார்த்திக்கை ரசித்த ரசிகர்களால் அவ்வளவு எளிதில் அக்னியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏகப்பட்ட நெகடிவ் கமெண்டுகள். அக்னி இன்ஸ்டாவிலும் இந்த நெகடிவ் கமெண்டுகள் நிரம்பின. கேலி, கிண்டல்களும் அவரை பின் தொடர்ந்தனர்.

இதனால் மனமுடைந்த அக்னி ஆரம்பத்தில் நடிக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்து கொண்டு தற்போது சீரியலில் கலக்கி வருகிறார். இப்போது அக்னியின் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுகொண்டு அவரையும் ரசிக்க தொடங்கிவிட்டனர்.

தற்போது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது, இனி பழைய ஆதியை பார்க்கலாம். என்ன விஷயம் என்றால், வரும் திங்கட்கிழமை முதல் (அக்டோபர் 4) செம்பருத்தி சீரியல் முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...