சொந்த வீட்டை விற்று இறுதியில் வாடகை வீட்டிற்க்கு வந்த நடிகர் கஞ்சா கருப்பு!

3 years ago 506

சினிமாவை பொறுத்தளவில் நடிகர் நடிகைகள் ஆவது எந்த அளவு கடினமோ அதை காட்டிலும் பல மடங்கு கடினம் காமெடி நடிகர்களாவது. 

அந்த வகையில் பல நடிகர்கள் காமெடி நடிகர்களாக நடிக்க வந்து வந்த இடம் தெரியாமல் போயுள்ளனர். ஒரு சில நடிகர்களே அவர்களது திறமை மற்றும் திறமையால் இன்றளவும் சினிமாத்துறையில் உள்ளனர். அப்படி ஒரு காமெடி நடிகர் தான் கஞ்சா கருப்பு. 

விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைபடத்தில் கஞ்சா விற்கும் நபராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் கஞ்சா கருப்பு. இவரது இயற்பெயர் கருப்பு ராஜா சுடலைமுத்து தனது முதல் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமே பின்னாளில் அவரது பெயரானது.

இந்த படத்தை ஜீவா நடிப்பில் வெளியான ராம் திரைபடத்தில் கதை முழுவதும் காமெடி நடிகனாக நடித்திருந்தார். இதன் மூலம் மக்களிடையே பிரபலமான கஞ்சா கருப்பு இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். 

சிவகாசி, சண்டகோழி, தாமிரபரணி, பருத்திவீரன் போன்ற படங்களில் இவரது நகைச்சுவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகரான கஞ்சா கருப்பு ஒரு திரைபடத்தை தயாரிக்கவும் செய்தார். 

ஆசை யாரை விட்டது என்பது போல் பல இயக்குனர்கள் இந்த படத்தை தயாரிக்க வேண்டாம் எப்பொழுதும் போல நீங்கள் நடிகரவே நடியுங்கள் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வேல்முருகன் போர்வேல்ஸ் எனும் படத்தை தயாரித்தார்.

ஆனால் அந்த படம் அட்டு பிளப் ஆக தான் இத்தனை வருடம் கஷ்டப்பட்டு சம்பதித்த அத்தனை பணத்தையும் இந்த படத்தின் மூலம் இழந்தார். மேலும் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு தனது கோவ குணத்தால் மக்களிடையே மதிப்பை இழக்கவே பிக்பாசில் இருந்து வெளிவந்த பிறகு இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடன் தொல்லை அதிகரிக்கவே தான் இருக்கும் வீட்டையே விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கஞ்சா கருப்பு. 

மேலும் அந்த படத்தால் நான்கு கோடிகளுக்கு மேல் இழந்த நிலையில் மேற்கொண்டு எந்த படத்தை தயாரிக்க போவதில்லை என கஞ்சா கருப்பு ஆவேசமாக கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...