ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்: பிரபல இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

3 years ago 193

விஜய் இதுவரை 64 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் பாணி கேரக்டரில் நடிக்கவில்லை என்பதால் அதுபோன்ற ஒரு கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் கவுதம் மேனன் இதற்கான முயற்சி செய்தார் , ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் விஜய் ஜேம்ஸ்பாண்ட் போன்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது. அந்த படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அந்தப் படம் டிராப் ஆனது.

இந்த நிலையில் விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிக்க வைப்பேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நேற்று அவர் டுவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடியபோது எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் தான் கொடுப்பேன் என்றும் அந்த கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிக்க வைக்க இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இயக்குநர் மிஷ்கினும் அதனையே தெரிவித்துள்ளார். எனவே விரைவில் விஜய் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...