’டான்’ ஆகும் சிவகார்த்திகேயன்.. இயக்கப் போவது யார் தெரியுமா?

3 years ago 341

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு 'டான்' எனப் பெயரிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 19வது படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். 

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.  இவர், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பில்லா படத்தின் இந்தி ரீமேக்கான டான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். டான் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகமும் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், லோக்கல் ஷாருக்கான் என அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் டான் என்கிற டைட்டிலில் படம் நடிக்கப் போவது வேற மாறி ஸ்பெஷல் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

தனுஷ் அனிருத் காம்போவை அடுத்து கலக்கி வருவது சிவகார்த்திகேயன் அனிருத் காம்போ தான். டாக்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் காம்போ டான் படத்திற்காக இணைந்துள்ளது. 

செல்லம்மா மாதிரி டான் படத்திலும் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...