டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதற்கான போட்டி எப்போது சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் இடையே தான் நடந்து வருகிறது. வழக்கமாக பாரதி கண்ணம்மா அல்லது ரோஜா சீரியல் தான் மாறி மாறி முதலிடத்தில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது 42வது வாரத்திற்கான டிஆர்பி விவரம் வெளிவந்து இருக்கிறது. அதில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் பிடித்து இருக்கிறது. 16 அக்டோபர் முதல் 22 அக்டோபர் வரையிலான காலநக்கட்டத்திற்கான ரேட்டிங் இது .
வெளியாகி இருக்கும் தகவல்களின்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 9.72 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது, இரண்டாம் இடத்தில் சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் 9.58 புள்ளிகள் உடன் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் நான்காம் இடத்தில் சுந்தரி சீரியல் இருக்கிறது.
ரோஜா சீரியல் யாராவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி ரோஜாவை ஓவர்டேக் செய்து ஐந்தாம் இடத்தினை பிடித்து இருக்கிறது.