டிரம்புக்கு போட்டியாக ரஜினி மகள் செய்யும் காரியம்… பரபரப்பு அறிவிப்பு

3 years ago 424

யார் எங்கே இருந்தாலும் சரி… என்ன சொல்ல வேண்டுமானாலும் சரி… சில விநாடிகளில் சமூக வலைதளம் மூலமாக சொல்லிவிட முடிகிறது. நொடிபொழுதில் அதில் உலக மக்களில் பலரையும் அந்த செய்தி சென்று சேர்ந்துவிடுகிறது.

அதன் காரணமாக சமூக வலைதளங்கள் பற்றிய பார்வை மக்களிடம் வேறுபட்டு காணப்படுகிறது. இந் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா வரும் 25ம் தேதி புதிய சமூக வலைதளம் ஒன்றை தொடங்க உள்ளார். அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

தமது சமூக வலைதளத்தின் பெயரையும் அவர் வெளியிட்டு உள்ளார். hoote என்று அவர் அதற்கு பெயர் வைத்துள்ளார். சவுந்தர்யாவின் இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பலர் டிரம்புக்கு போட்டியாக என்று நினைத்து ஏகத்துக்கும் கருத்து கூறி வருகின்றனர்.

அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபராக டிரம்ப், சொந்தமாக சமூக வலைதளம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்தார். ட்ரூத் சோஷியல் என்று பெயரில் அதை அவர் தொடங்கி இருக்கிறார். அதனை ஒப்பிட்டு தான் பலரும் சவுந்தர்யாவின் சமூக வலைதள அறிவிப்பை கண்டு கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...