டிவிட்டரில் ட்ரெண்டாகும் நயன்தாரா... தெறிக்க விட்ட ரசிகர்கள்.!

3 years ago 331

வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவது, கோவில்களில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தியும் வருகிறார்கள்.  

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிப்பதாகவும் கிசுகிசுக்கள் வருகின்றன. காதல், திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள். 

 

நயன்தாரா கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு இன்னும் சில மாதங்களில் விக்‌னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. 

 

காதலர் தினமான நேற்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளதாக ஏற்கனவே விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். 

 

அதன் படி, நேற்று இரவு 7 மணிக்கு இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது. இது விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 

 

அதிலும் காதலர் தின திட்டம் என்று வேறு விக்னேஷ் சிவன் கூறி இருந்ததால் அப்படி என்ன இருக்கிறது அதில் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த நிலையில் நயன்தாரா பட்டு சேலையிலும் விக்னேஷ் சிவன் பட்டு சட்டை அணிந்தும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடினர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...