தடுப்பூசி போட்ட ரோஜா சீரியல் நடிகைக்கு கொரோனா! மூச்சு விடுவதில் சிரமம்

3 years ago 496

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் தற்போது அனு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அக்ஷயா. அவர் அதற்கு முன்பு சன் டிவியில் வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

ரோஜா சீரியலில் கொடூர வில்லி ரோலில் நடித்து வந்த ஷாம்லி கர்ப்பமாக இருப்பதால் அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதற்குப்பிறகு அந்த ரோலில் அக்ஷயா நடிக்கத் தொடங்கினார். வழக்கம் போல அவரையும் அனுவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தனக்கு தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக அக்ஷயா பதிவிட்டிருக்கிறார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

"அனைவருக்கும் வணக்கம் துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் என டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கிறது. எனக்கு ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருந்தது, அதனால் நான் மருத்துவரை சென்று பார்த்தேன். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தனியார் படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்."

"தற்போது நான் நன்றாக உணர்கிறேன். 4கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்றாலும் அது தொற்று வருவதை முற்றிலுமாக தடுக்க வில்லை. அதனுடைய பாதிப்பு மிக தீவிரமாக ஆகாமல் பார்த்துக் கொண்டது."

"கொரோனா இன்னும் எல்லா இடத்திலும் இருக்கிறது. தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள் நான் வெகு விரைவில் முற்றிலுமாக குணமடைந்து திரும்புவேன். உங்கள் பிரார்த்தனையில் என்னையும் நினைத்து கொள்ளுங்கள்" என அக்ஷயா கூறியிருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர், அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...