தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் 20 நிமிடங்களுக்கும் மேல் மேடையில் பேசினார்.
இதில், வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை குஷ்பூ குறித்து பேசும்பொழுது, 'குஷ்பூவின் முகத்தை பார்த்தாலே, எனக்கு சின்னத்தம்பி படம் தான் நினைவுக்கு வருகிறது.
நான் அடிச்சு புடுச்சு டிக்கெட் வாங்கி சின்னத்தம்பி படத்தை பார்க்க போனது, என்னுடைய நண்பர்களுடன் பார்க்க போனது, என்னுடைய Girl Friends கூட பார்க்க போனது தான் நினைவுக்கு வருகிறது' என்று கூறினார்.
இதன்பின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினி ரம்யா, யார் அந்த Girl Friend என்று கேட்டவுடன் அப்படியே அந்த பேச்சை நிறுத்திவிட்டார் விஜய்.