தனது அம்மா-அப்பாவுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா

2 years ago 501

தமிழ் சினிமா ஒரு காலத்தில் பெரிய அளவில் கொண்டாடிய பிரபலம். 1999ம் ஆண்டு வாலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அவர் அடுத்தடுத்து தனது திரைப்பயணத்தில் பெரிய வெற்றியை கண்டார்.

குஷி, டும் டும் டும், தூள், திருமலை, மொழி, சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு என ஏராளமாக வெற்றி படங்கள் இவரது திரைப்பயணத்தில் உள்ளன. 

வெற்றி நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். பின் இரண்டு குழந்தைகளை பெற்று அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகே சினிமாவில் நடிக்க வந்தார்.

கடந்த சில மாதங்களாக ஜோதிகாவின் புகைப்படங்கள் அதாவது அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன. அப்படி இப்போதும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அவர் இந்த வருட விநாயகர் சதுர்த்தியை தனது அம்மா-அப்பா குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...