தனது உடல் நலம் குறித்து கேப்டன் விஜயகாந்த் டுவிட்

3 years ago 350

விஜயகாந்த் உடல்நலப் பிரச்னையின் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாளன்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி மகன் சண்முக பாண்டியனுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்றார்.

தொண்டையில் தொற்று, நடைபயிற்சி உள்ளிட்டவற்றுக்காக துபாயிலேயே தங்கி சிகிச்சையை எடுத்து வரும் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், ‛நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம், என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு விஜயகாந்த் அமர்ந்துகொண்டு செல்போனில் திரைப்படம் பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...