தனது காதலரை அறிமுகப்படுத்திய நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!

3 years ago 572

பிரபல சின்னத்திரை நடிகையான சஹானா ஷெட்டி சோஷியல் மீடியா மூலம் தனது காதலரை ரசிகர்களுக்கும், வெளியுலகிற்கும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி. பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சஹானா ஷெட்டி. 

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான "அழகு"என்ற சீரியலில் மூத்த வெள்ளித்திரை நடிகையான ரேவதி மற்றும் மூத்த நடிகரான தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.


அழகு சீரியலில் தலைவாசல் விஜய் - ரேவதி தம்பதியரின் மகளாக காவ்யா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார் நடிகை சஹானா ஷெட்டி. 1993ம் ஆண்டு ஜூலை 27-ல் பிறந்த இவர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அரூபம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சஹானா, சலீம், கொக்கிரகுளம், உன்னால் என்னால், இவளுக இம்சை தாங்க முடியல, சயணம், போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும், சமுத்திரகனியின் காயிதம், பாலாவின் தார தப்பட்டை உட்பட20-க்கும் மேற்பட்ட படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...