தனது காதலியை திருமணம் முடித்த மாஸ்டர் பட நடிகர் !

3 years ago 277

மாஸ்டர் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இணையதளங்களிலும் வெளியாகிவிட்டது.

விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர கௌரி நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் பல்வேறு புதியமுகங்கள் நடித்திருந்தனர்.அதில் ஒருவர்தான் கலாட்டா குரு.ஆதித்ய டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் சில படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் வீட்டில் வேலை செய்யும் நபராக நடித்து இருந்தார் கலாட்டா குரு. ஆரம்பத்தில் மேடை கலைஞ்சனாக இருந்த இவர் பின்னர் ஆதித்யா தொலைக்காட்சியில் இருந்த பணியாற்றினார்.

இப்படி ஒரு நிலையில் இவர் தனது நீண்ட நாள் காதலியான கற்பகம் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் இன்று (பிப்ரவரி 3) காலை நடைபெற்றது.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...