தனது திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா!

6 months ago 83

தனது திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா!


தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு பிறகு காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. பெரும்பாலும் இவர் குண சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். 


இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகை போல உற்சாகம் குறையாமல் வளம் வருகிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 


அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்நிலையில் கோவை சரளா சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேட்டியில் கூறிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


அதில், ‘இப்போ கல்யாணம் பண்ணவங்களை எல்லாம் பார்த்தது சிரிச்சிட்டு இருக்கேன். யாரும் சொன்னா கேட்க மாட்டேங்கறீங்க. எப்படி இருந்தாலும் மனுஷன் தனியா வாழ்ந்துதான் ஆகணும். நம்ம போற இடதுக்கெல்லாம் புருஷனை கையில் பிடித்துக்கொண்டா போக முடியும். 


ஒரு கட்டத்தில் புருஷன் விட்டுட்டு தான் போக போறாரு. ஒன்னு ஓடிப்போக போறாரு, இல்லன்னா மேல போக போறாரு. அப்போ நம்ம தனியா தான் இருந்து ஆகணும். நான் திருமண வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டேன்னு என்னைக்குமே ஃபீல் பண்ணது கிடையாது என்று கூறியுள்ளார்.


மேலும், யாரோ ஒருத்தர் என்கிட்ட இருந்து தப்பிவிட்டார் என்று தான் நினைப்பேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆன்மீகம் எனக்குள்ள இருந்து இருக்குனு நான் நினைக்கிறேன். 


அப்புறம் சின்ன வயசுல இருந்து எனக்கு வாழ்க்கையில் முன்னேறனும் என்ற எண்ணங்கள் தான் அதிகமாக இருந்திருக்கு. அப்போ கல்யாணம் பத்தி எல்லாம் நம்ம யோசிச்சிட்டு இருந்தோம்னா, நம்ம நினைச்சது நடக்காது. அதனால குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி, எப்பயுமே எனக்கு கேரியர் மேலதான் ஃபுல் ஃபோக்கஸும் இருந்தது என்று கோவை சரளா தெரிவித்துள்ளார்.


கோவை சரளாவின் உண்மையான பெயர் சரளா குமாரி. இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர். ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்த இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். 


ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போதே தன்னை சினிமாவில் சேர்த்து விட வேண்டும் என்று பெற்றோர்களிடம் இவர் அடம்பிடித்து இருக்கிறார். மேலும் இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. எம்.ஜி.ஆர் கோவைக்கு வரும்போது எல்லாம் மேடைக்கு முன் நின்று கைதட்டி ரசித்துள்ளார் கோவை சரளா.


ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே கோவையில் பல மேடை நாடகங்களில் கோவை சரளா நடித்திருக்கிறார். அதன் பின் இவர் ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். 


பிறகு பாக்யராஜ் நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் இவர் அறியப்பட்டார். இப்படி 40 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் நடித்து வரும் கோவை சரளா, பல சாதனைகளை செய்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் செய்யாமல் வாழ்கிறார். தற்போது கோவை சரளா சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...