தனது பாடல்களுக்கு தனியாக புதிய செயலி தொடங்கினார் இளையராஜா

3 years ago 253

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பல்வேறு செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்குக் காலர் டியூன்களாகவும், ரிங் டோன்களாகவும் கொடுத்து அதற்குத் தனியாகப் பணம் வசூலித்து வருகின்றன. 

இதே போல சிலர் இளையராஜாவின் பழைய பாடல்களை நவீன முறையில் தர மேம்படுத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

இதற்கு முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி வாங்கினார்களா என்பது தெரியாது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இளையராஜா, ரசிகர்கள் தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார். 

இதன் மூலம் சில பாடல்களை அவரே நேரில் பாடி பதிவு செய்திருப்பதையும் பார்க்க முடியும். இந்த செய்தி இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...