தனது ஹோட்டலுக்கு சென்று பானிபூரி சாப்பிட்ட ப்ரியங்கா சோப்ரா..

3 years ago 278

நடிகை ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய்யுடன் இணைந்து ‘தமிழன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

நடிகை ப்ரியங்கா சோப்ரா 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


அதையடுத்து கலிஃபோர்னியாவில் 144 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை இருவரும் வாங்கினர். 

பின்பு நடிகை ப்ரியங்கா சோப்ரா’சோனா’ என்ற உணவகத்தை நியூ யார்க்கில் தொடங்கினார்.

இந்த உணவகம் மார்ச் 26 ஆம் தேதி துவங்கப்பட்டது.இங்கு இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகள் கிடைக்கிறதாம். 


இந்நிலையில் இந்த உணவகத்திற்கு தனது நண்பர்களுடன் ப்ரியங்கா சோப்ரா சென்றுள்ளார். 

மேலும் அங்கு பானி பூரி போன்ற உணவுகளை நண்பர்களுடன் சேர்ந்து ருசித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...