தனுஷை தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்?

3 years ago 260

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. 

இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேபோல் அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஜாதி ரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளதாகவும், இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர்கள் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் தெலுங்கு படங்களில் கமிட்டாகி உள்ள நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...