தனுஷ் அப்பாவை திட்டிய கவுண்டமணி! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த பிரபலம்

3 years ago 368

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் அவரது தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா. 

நடிகர் கவுண்டமணி படப்பிடிப்பு தளத்தில் அவரை திட்டியதாக சிவசங்கர் மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

தனுஷின் சூப்பர் ஹிட் பாடலான மன்மதராசா பாடலுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர். 

இதையடுத்து, கவுண்டமணி நடித்த ஒரு படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றினார். அப்போது கவுண்டமணி மன்மத ராசா பாடல் பற்றி அவரிடம் பேசினாராம். அப்போது மன்மத ராசா பாடல் கவுண்டமணிக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் 

இந்த கஸ்தூரிராஜா இருக்கானே, அவனுக்கு உங்கள மாதிரி மாஸ்டர் இருக்கிறதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா. என் முன்னாடியே பாம்பே மாஸ்டர் வேண்டுமென தேடுறான், நான் கூட நம்ம சிவசங்கர் மாஸ்டர் இருக்கிறாரே என்று சொன்னேன், ஆனா அதுக்கு கஸ்தூரி ராஜா, இல்ல சார், பையன் தனுஷ் ஆசைப்படுறாப்புல என நெளிந்தாராம்.

பையன் கேட்டா எதுனாலும் கொடுத்துடுவியா என்று சிவசங்கர் மாஸ்டருக்காக சப்போர்ட் செய்து பேசியதாகவும் அதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார் மாஸ்டர் சிவசங்கர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...