தமன்னா, ஸ்ருதிக்கு கட்அவுட்... அமலா பாலுக்கு கெட்அவுட்டா...?

3 years ago 427

இளம் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறார்கள். அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காகவே தங்களின் அப்பா, தாத்தா வயது நடிகர்களுடன் இளம் நடிகைகள் இணைந்து நடிக்கின்றனர். 

இன்னொரு காரணம், வயதானாலும் அந்த நடிகர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் செல்வாக்கு. ரஜினிக்கு வயது 70 என்றாலும் முப்பது வயது ஹீரோக்களுக்கு ரஜினியின் மாஸில் கால்வாசி இல்லை அல்லவா? இதில் அமலா பாலுக்கு தெலுங்கு திரையுலகம் காட்டியிருக்கும் ஓரவஞ்சனைதான் டாக் ஆஃப் தி டவுன்.

வேதாளம் படத்தை போலா சங்கர் என்ற பெயரில் தெலுங்கில் எடுக்கிறார்கள். சிரஞ்சீவி நாயகன். இதில் சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

எப்படி? தமன்னா வழக்கமாக வாங்குவதைவிட அதிக சம்பளம் தருவதாகக் கூற தமன்னாவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக ஸ்ருதி இதுவரை வாங்காத சம்பளமான இரண்டு கோடியை தந்திருக்கிறார்கள். ஸ்ருதி வாங்கும் அதிகபட்ச சம்பளம் இது.

அப்படியே யு டர்ன் அடித்து அமலா பால் விஷயத்துக்கு வருவோம். நாகார்ஜுனா பிரவீன் சட்டாரு என்பவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவரை மாற்றிவிட்டு அமலா பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அமலா பாலுக்கு வயது 30. நாகார்ஜுனாவின் வயது 62.

தமன்னா, ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்த அதே சலுகையை அமலா பால் தயாரிப்பாளரிடம் எதிர்பார்த்து, சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டிருக்கிறார். தயாரிப்பாளரோ அதெல்லாம் முடியாது என்று வேறு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார். 

தமன்னா, ஸ்ருதிஹாசனுக்கு தாராளம் காட்டிய தெலுங்கு திரையுலகம் அமலா பால் விஷயத்தில் கைவிரித்திருக்கிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...