தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒர் நிலைமையா.? ஷங்கர் முதல் முருகதாஸ் வரை கைவிட்ட துரோகம்

2 years ago 421

இந்தியாவில் பல மாநிலங்கள் திரைப்படங்கள் எடுத்து அதன் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். அதில் முதலிடத்தில் ஹிந்தி சினிமா அதாவது பாலிவுட் உலக தரத்திற்கு இன்று பல படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் உலக அரங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலங்களும் அவர்களுக்கு தகுந்தாற்போல் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள் புகழ் பெற்று வருகிறார்கள்.

பாலிவுட்டிற்கு அடுத்ததாக நமது தமிழ் சினிமா அதாவது கோலிவுட் பேசப்பட்டு வந்தன. அந்த அளவிற்கு நல்ல இயக்குனர்கள் நல்ல நடிகர்கள் நல்ல தொழில்நுட்பங்கள் தமிழ் சினிமாவை அனைவரிடமும் உலகத்திற்கும் எடுத்துக் கொண்டு சென்றனர். நமது தமிழ் சினிமாவை பார்த்து பாடம் கற்ற பல மாநிலங்கள் இருக்கிறார்கள்.

தமிழ்சினிமாவிற்கு அடுத்தபடியாக பிரம்மாண்ட பொருட் செலவு என்று பார்த்தால் தெலுங்கு சினிமா உலகம். அதற்கு அடுத்ததாக கேரளா சினிமா அவர்கள் கதைக்காக மட்டுமே படம் எடுப்பார்கள் பொருளாதார ரீதியில் திரைப்படம் எடுக்க மாட்டார்கள். 

அடுத்ததாக கன்னட திரைப்படங்கள் இவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவை பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் இப்போது இல்லை.

தெலுங்கு சினிமா இப்பொழுது மிக வளர்ச்சியில் உள்ளது அதற்கு காரணம் ராஜமவுலி நடிகர்களை வைத்து படத்தை வெற்றியடையச் செய்து அந்தப் படத்தில் நடித்த நடிகர்களில் உலக தரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள் வசூல் ரீதியாக 2000 கோடி  என்று அவர்கள் வெற்றி நீண்டு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

திரைப்படங்கள் எடுக்கும் கன்னட சினிமா 15 வருட பின்னாடி இருந்த நிலையில் தற்போது உலகத்தரத்திற்கு சென்றுவிட்டது. இதற்கு காரணம் ஒரே படம் கேஜிஎப் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் யஸ் கதாநாயகன் வைத்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளார். 

இவ்வாறு இருக்க தமிழ் சினிமா ஒரு சில டைரக்டர்கள் ஒரு சில பெரிய நடிகர்கள் இவர்களை சுற்றியே தமிழ் சினிமா வளர்ந்து வந்தது. எடுத்துக்காட்டாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்பொழுது தெலுங்கு பக்கம் சென்று விட்டார். 

முருகதாஸ், லிங்குசாமி, ஹரி, தமிழ் பிரமாண்ட இயக்குனர்கள் இன்று தமிழ் படங்களை இயக்கவில்லை தெலுங்கு பக்கம் சென்றுவிட்டனர். 

பெரிய நடிகர்களின் படங்களும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று தமிழ் சினிமா வெற்றியை நோக்கி செல்லமுடியாமல் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...