தல 61 தரமான கூட்டணி..! பங்கு தெறிக்கவிடலாமா....

3 years ago 271

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற உள்ளது. 

படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 திரைப்படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே தல அஜித்தின் 61-வது படத்தை சுதா கொங்கரா, விஷ்ணு வர்தன் ஆகியோர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக தல 61 படத்தினை எச்.வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தல அஜித்தை வைத்து கிரீடம் எனும் படத்தினை இயக்கியதும்,அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தல அஜித் விஜய் அவர்களை சந்தித்து உள்ளதாகவும், நீண்ட நேரம் பேசியதாகவும் வெளியான தகவலை தொடர்ந்து தல 61 படத்தினை ஏ.எல்‌.விஜய் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...