‘தலைவி’ படம் எப்போது ரிலீஸ் ஆகும்? – நடிகை கங்கனா விளக்கம்

3 years ago 268

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் தயாராகி இருக்கிறது. 

இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகை கங்கனா அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது: “தலைவி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...