தளபதியின் வாரிசு பட ரிலீஸ் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு இதோ!

2 years ago 278

தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தளபதி 67 திரைப்படத்தில் இக்கூட்டணி இணையவுள்ளது.

கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

விரைவில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. 

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் UK ரிலீஸ் உரிமையை அஹீம்ஸா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...