தளபதியை தொடர்ந்து உலக நாயகனுக்கு வில்லனாகும் மக்கள் செல்வர்... பரபரப்பு தகவல்

3 years ago 268

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...