திடீரென்று பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோனே

3 years ago 384
தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தீபிகா படுகோனே கடந்த 2019-ம் ஆண்டு எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

அவருக்கு முன்பு அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இந்த பதவியில் இருந்தார். இந்த நிலையில் மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது. 

ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...