திடீர் உதவி கேட்ட அட்லீ.. ஒன்றரை மணிநேரத்தில் உதவிய நல் உள்ளங்கள்!

3 years ago 486

தளபதி நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. 

பிகில் படம் ஓடிக்கொண்டிருந்த நிலையிலேயே அப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருப்பதாக அட்லீ தெரிவித்திருந்தார். 

ஆனால் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிசியாகினார். இதனால் அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களிடம் உதவி ஒன்றை கேட்டிருந்தார். அதாவது உதவி இயக்குனர் ஒருவரின் தந்தை அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் அதற்கு ரத்தம் தேவைபட்டதால் உடனே அதற்கான விவரங்களை பதிவிட்டு உதவி கேட்டிருந்தார். 

இதையடுத்து அவரின் ரசிகர்கள் உதவி செய்ய முன்வந்து பதிவுகளை இட்டனர். கோவை மருத்துவமனை என்பதால் உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஒன்றரை மணிநேரத்தில் ரத்தம் கொடுக்கும் டோனர் கிடைத்துவிட உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் டுவீட் பதிவிட்டு இருந்தார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...