திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்

3 years ago 341

சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. 

இவர் மே 4-ந்தேதி தனது 38ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார். அவருக்கு அவரது சினிமா நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள்.

இந்நிலையில் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள நடிகை சார்மி, திரிஷாவின் திருமணம் குறித்தும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். 

அந்த செய்தியில், திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் திரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை அவர் மறைமுகமாக இப்படி தெரிவித்துள்ளார். நடிகை சார்மியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...