திரிஷாவை மட்டும் தனது படங்களில் ஒதுக்கும் பிரபல இயக்குனர் சங்கர்! கோலிவுட்டில் குழப்பம்.!

3 years ago 367

கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனராக உள்ள சங்கர் அந்த நடிகைக்கு மட்டும் தன்னுடைய படங்களில் ஒரு சின்ன வாய்ப்புகூட கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரக்காரணம் என்ன என கோலிவுட் வாசிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.

இயக்குனர் சங்கர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. பலருக்கும் இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு நீண்ட வருடமாக ஷங்கர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா.

இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்களில் அவருடைய இணை இயக்குனர்கள்  பெரும்பாலும் பல படங்களில் த்ரிஷாவை  ஹீரோயினாக போட்டால் சரியானதாக இருக்கும் என்று பல கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சிபாரிசு செய்து உள்ளனர். ஆனால் நடிகை திரிஷா என்றதுமே சங்கர் வேண்டாம் என்று கூறி விடுவாராம்.

தற்போது இயக்குனர் ஷங்கர் கோலிவுட்டில் இயக்குவதை கைவிட்டுவிட்டு தெலுங்கு பாலிவுட் என்று கிளம்பி விட்டார். இதற்கு பிறகும் நடிகை திரிஷாவுக்கு இயக்குனர் சங்கர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது எட்டாத கனி போல தான் என்கிறார்கள். 

நடிகை த்ரிஷாவுக்கும் நாளுக்குநாள் வயதாகிக் கொண்டே செல்வதால் இயக்குனர் சங்கர் படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதுதான் என்கிறார்கள்.

அவ்வாறே கிடைத்தாலும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு ஏதாவது முத்தின கதாபாத்திரம்தான் கொடுப்பார் என்று கூறுகிறார்கள். அப்படியென்ன இருவருக்குள்ளும் பஞ்சாயத்து இருக்கிறது என்று தெரியாமல் புலம்புகிறார்கள் கோலிவுட் வாசிகள். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...